முகப்பு

கண்ணோட்டங்கள்

ஒருவர் எப்படிப்பட்டவரோ அதற்கேற்ப அவருக்கான நண்பர்கள் அமைந்து விடுவார்கள் அல்லது அவர் அதற்கேற்ப தமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்வார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் மனதளவில் நட்பு கொள்கிறான் எனில் இருவரையும் இணைக்கக்கூடிய பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது என்று பொருள். ஒரு மனிதன் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களுக்கும் அவனுடைய

சுமூகமான குடும்ப வாழ்வு

குடும்ப வாழ்வு சுமூகமாகச் செல்வதற்குப் பின்னால் நேரடியான அல்லது மறைமுகமான சர்வாதிகாரமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இரு சமமான மனிதர்கள் நீண்ட நாட்கள் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. இருவரிடமும் காணப்படும் கூர்மையான ஈகோ அவர்களைப் பிரித்து விடும். ஆனாலும் அவர்கள் ஓர் இடைவெளியோடு சேர்ந்திருக்க முடியும். ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராக

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை நீடிப்பது வெறுமனே அன்பின் அடிப்படையில் அல்ல. அன்பு ஆரம்ப நிலைக் காரணியாக இருக்கலாம். பெரும்பாலும் அது ஆரம்ப நிலைக் காரணியாக மட்டுமே இருக்கும். அன்பு ஒரே நிலையில் அப்படியே நீடிக்கக்கூடியது அல்ல. அது தற்காலிகமானது; மாறக்கூடியது; இடம்பெயரக்கூடியது. வெறுமனே அன்பின் அடிப்படையில் மட்டுமே மணவாழ்க்கை நிலைபெற

துரோகம்

ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதற்கு ஒருவர் மற்றவருக்கு விசுவாசமாக இருப்பதும் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருப்பதும் மிகவும் அவசியம். அந்த விசுவாசமே குடும்ப வாழ்வுக்கான அடித்தளம். அப்படியில்லாத பட்சத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்திருக்கவில்லையெனில் வேறு ஏதேனும் நிர்ப்பந்தம் இல்லையெனில் அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். கள்ளக்காதலும் முறையற்ற உறவுகளும் குடும்ப வாழ்வின்

மலட்டு விவாதம்

மலட்டு விவாதம் என்ற தலைப்பில் எகிப்திய எழுத்தாளர் அஹ்மது அமீனின் கட்டுரை ஒன்று இருக்கிறது. தலைப்பே கட்டுரையின் கருவை கச்சிதமாக சொல்லி விடுகிறது. ஒரு விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு, அதன் சாதக, பாதக அம்சங்களை அலசுவதற்கு விவாதங்கள் பயனளிக்கலாம். விவாதத்திற்கான எல்லை இதுதான். இந்த எல்லையில் நின்று,

காதல் வயப்படுவது…

மனிதர்கள் காதல்வயப்படுவது எதிர்பாராத, அற்புதமான ஒரு நிகழ்வுதான். தான் அனுபவிக்கும் ஆரம்பகட்ட இனிமையை மனிதன் மீண்டும் அனுபவிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் உச்சகட்ட போதை. அந்த போதையில் பலர் தங்களின் நெருங்கிய நண்பர்களை, உறவினர்களை இழக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட காலம்வரை நீடிக்கும்

அகீதா பிரச்சனை

அகீதா என்றால் கொள்கைசார்ந்த, நம்பிக்கைசார்ந்த விசயங்கள் தொடர்பாக சொல்லப்படும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தை நபியவர்களின் காலகட்டத்திலோ அவர்களுடைய தோழர்களின் காலகட்டத்திலோ உருவாகி இருக்கவில்லை. இந்த வார்த்தையே பிற்காலத்தில் உருவாகி வந்த அந்நியமான ஒன்றுதான். சரி, இந்த வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்வோம். முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய

அல்ஹம்துலில்லாஹ்

“படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” நம்பிக்கையாளனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான வாசகம் இது. அவன் மீண்டும் மீண்டும் இந்த வாசகத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். நன்றியுணர்ச்சி அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த தனக்கு அல்லாஹ்தான் இருப்பும் இங்கு வாழ்வதற்கான

தக்வா என்பது

“யார் தக்வாவோடு நடந்து கொள்வாரோ நாம் அவருக்கு ஒரு வெளியேறுமிடத்தை ஏற்படுத்துவோம். அவர் அறியாத புறத்திலிருந்து அவருக்கு நாம் வாழ்வாதாரம் வழங்குவோம்.” (65:2,3) இந்த வசனத்தை படித்த நாளிலிருந்து நான் மறக்கவேயில்லை. அந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு திறப்பு, ஒரு மகிழ்ச்சி இன்றளவும் அப்படியே நினைவிருக்கிறது. பிரச்சனைகளில், சிரமங்களில்

பாவத்தின் ஈர்ப்பு

தடுக்கப்பட்ட வழியில் அனுபவிக்கும் இன்பத்தைவிட அதனால் ஏற்படும் துன்பம் அதிகமாக இருக்கும். இங்கு ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய விலை இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமைகள் இருக்கின்றன. திருடித் தின்பவன் ஒருநாள் வசமாக மாட்டிக் கொள்வான். அவனால் எல்லா சமயத்திலும் தப்பிக்க முடியாது. எல்லா சமயத்திலும் அவனால் விழிப்புணர்வோடு, புத்திசாலித்தனத்தோடு நடந்துகொள்ள