முகப்பு

மொழிபெயர்ப்பு – சில வார்த்தைகள்

ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு அந்த புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்ற வேண்டியது மிக அவசியம். இல்லையெனில் அது உயிரோட்டமற்ற வெற்று உடலாகிவிடும். புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்றும் மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழியில் நல்ல மொழிவளத்தையும் பெற்றிருப்பார் எனில் அது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக வெளிப்படும். சில சமயங்களில் மூல மொழியில் உள்ள

விதியை நாம் எப்படி புரிந்துகொள்வது?

என் வாழ்வின் நிகழ்ந்த சில நிகழ்வுகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. சில சமயங்களில் எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்கும் அது நிகழ்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கும் மத்தியிலுள்ள தொடர்பு என்னை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு. சில சமயங்களில் நிகழ்வுகளுக்கு மத்தியில் அறுபடாமல் சில

பொறுமை

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபியவர்கள், “கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். மீண்டும் தனக்கு அறிவுரை கூறுமாறு கேட்டார். அதற்கும் ”கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். (புகாரீ) ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்கள். ஆத்திரம் கொள்ளும்போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். அப்போது அவனிடமிருந்து வெளிப்படும்

வெற்றியைத் தீர்மானிப்பது எது?

  வெளிப்படையான காரணிகளைக் கொண்டு மாத்திரம் ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அவற்றுக்கு அப்பால் நாம் அறியாத வேறு  மறைமுகமான காரணிகளும் இருக்கின்றன. அருகில் தென்படுகின்ற வெளிப்படையான காரணிகளைக்கண்டு ஒருவர் அல்லது ஓர் அமைப்பு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று நாம் எண்ணலாம்.

இலாபகரமான வாழ்க்கை

இந்தக் காலகட்டம் இடையூறுகளால், நம்மை மூழ்கடிக்கும் விசயங்களால் ஆனது. கொஞ்சம் அசந்தால் நாம் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி அதுவே நம் வாழ்க்கை என எண்ண ஆரம்பித்து விடுவோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாளை வீணடித்து விடுவோம். இந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை மனிதனை வெறும் இயந்திரமாக ஆக்கி விடுகிறது. சம்பாதிப்பதும்

பேராசையும் நுகர்வு வெறியும்

மற்றவர்களிடம் காட்டி பெருமிதம் கொள்ள வேண்டும், அவர்களோடு போட்டி போட்டு தனக்கென ஒரு கௌரவத்தை உருவாக்க வேண்டும், பெரும் புகழும் அங்கீகாரமும் பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லையெனில் மனிதன் தனக்குத் தேவையானவற்றைத் தவிர வேறு எதையும் சம்பாதிக்க மாட்டான். அவனுடைய பேராசையும் நுகர்வு வெறியும் பெருமளவு

குர்ஆனின் வசீகரம்

திருக்குர்ஆனுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது. அதன் ஓலிகூட நம்மை கவர்ந்திழுக்கும். அதற்கு நம்முடைய மனதில் ஒரு வகையான அமைதியை ஏற்படுத்தும் வலிமை இருக்கிறது. முதன் முதலாக நான் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்பட்டது அதன் கிராஅத்தை கேட்டதன் வழியாகத்தான். அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் ஹுதைஃபியின் கிராஅத்தை உள்ளடக்கி இருந்த

பலவீனர்கள் அல்ல உதவியாளர்கள்

“உங்களிலுள்ள பலவீனர்களின் காரணமாகவே உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது; நீங்கள் உதவி செய்யப்படுகிறீர்கள்.” தம் திறமையின் காரணமாகத்தான் தமக்கு எல்லாம் கிடைக்கிறது என்று எண்ணிய ஒருவருவருக்கு நபியவர்கள் கூறிய அறிவுரை இது. உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள பலவீனர்கள் உங்களுக்குச் சுமைகள் அல்ல. மாறாக அவர்களின் காரணமாக உங்களின் வாழ்வாதாரத்தில் விசாலம்

விவாதம் – ஒரு சிறிய விளக்கம்

எல்லாவற்றுக்கும் நாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியுமா? விவாதத்தின் மூலம் நம்மால் ஒரு தீர்வை எட்டிவிட முடியுமா? விவாதம் தீர்வை நோக்கி இட்டுச்செல்லக்கூடியது அல்ல. அது முடிவிலியாக நீண்டு கொண்டே செல்லக்கூடியது. அது ஒரு வகையான கருத்தியல் யுத்தம். தோல்வியடைந்தவர்கள் காழ்ப்புகளை சுமந்துகொண்டு பின்வாசல் வழியாக அல்லது வேறொரு வடிவில்

லௌகீகமும் ஆன்மீகமும்

லௌகீக வாழ்வில் மனிதன் தன்னை தொலைத்துவிட்டால் தன் ஆன்மீக வாழ்வை அவன் இழந்துவிடுவான். ஆன்மீக வாழ்வில் தன்னை தொலைப்பவன் தன் லௌகீகத்தை இழந்துவிடுவான். லௌகீகமும் ஆன்மீகமும் சரிவிகிதத்தில் கலந்த வாழ்வே மனிதனை சரியான நிலையில் நிலைநிறுத்த முடியும். இஸ்லாம் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டத்தையே முன்வைக்கிறது. அது எந்தச்