முகப்பு

விமர்சனமும் பாராட்டும்

பாராட்டுவதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும். அற்பர்கள் யாரையும் பாராட்ட மாட்டார்கள். சிறப்புகள் அனைத்தும் தங்களுக்கு மட்டுமே உரியது என்ற சுயநலமும் கஞ்சத்தனமும் அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கும். அவர்களுக்குத் தெரிவதெல்லாம் மற்றவர்களின் குறைகள் மட்டுமே. மலையளவு நிறைகளுக்கு மத்தியில் மயிரளவு குறைகள்தான் அவர்களின் கண்களுக்குத் தெரியும். பலர் பாராட்டுதலுக்கும்

டிஎன்டிஜேவின் வீழ்ச்சி நமக்குத் தரும் பாடம்

வெகுஜன உணர்வுகளுக்குத் தீனியிடும் அமைப்புகளே மிக விரைவில் வளர்ச்சியடைகின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக, எந்த நோக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு விடுவார்கள். வெகுஜனங்களின் ஆதரவைப் பெற, தங்கள் உறுப்பினர்கள் தங்களைவிட்டும் சென்றுவிடாமல் காக்க பெரும்பாலான அமைப்புகள் இத்தகைய போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. சாத்வீகமான, அறிவுப்பூர்வமான

கடும்போக்குவாதம்

கடும்போக்கு என்று நான் குறிப்பிடுவது, ஒருவர் தாம் சரியென நம்பும் கருத்தை மற்றவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முற்படுவதும் மற்றவர்களின் கருத்தை மூர்க்கமாக மறுப்பதும் அதற்காக அவர்களுடன் பகைமை பாராட்டுவதும் ஆகும். கருத்து வேறுபடுவது மனித இயல்பு. மனிதர்கள் தங்களுடைய விவகாரங்கள் அனைத்திலும் கருத்துவேறுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். மனிதனின் அடிப்படையான

எங்கள் இறைவனே!

ஆதாரம் எதற்குத் தேவைப்படுகிறது? ஒரு விசயத்தை மக்களின் முன்னால் நிரூபிப்பதற்கு, மற்றவர்களை வாயடைக்கச் செய்வதற்கு. நீங்கள் ஒரு விசயத்தை நம்ப வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் அவசியமில்லை. ஆதாரத்திற்கும் நம்பிக்கைக்கும் மத்தியில் அவ்வளவு நெருக்கமான தொடர்பு எல்லாம் இல்லை. அந்த நம்பிக்கை முதலில் உங்களுக்குள் இருந்து உருவாகி வர

பாவம் என்பது…

“எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னிக்கவில்லையென்றால், எங்கள் மீது கருணை காட்டவில்லையென்றால் நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.” (7:23) இது ஆதம் (அலை) பாவம் செய்த பிறகு இறைவனிடம் மன்னிப்புக்கோரி செய்த பிரார்த்தனை. இதுதான் முதல் பிரார்த்தனையும்கூட. இறைவனின் கட்டளையை மீறுவது பாவம்

கண்சிமிட்டும் நேரம்கூட

“நித்திய ஜீவனே! நிலையானவனே! உன் அருளை நான் வேண்டுகிறேன். என் விவகாரங்கள் அனைத்தையும் நீ சீர்படுத்துவாயாக. கண்சிமிட்டும் நேரம் அளவுக்குக்கூட என்னை என் மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிடாதே” (நஸயீ, ஹாகிம்) காலையும் மாலையும் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் இந்த பிரார்த்தனையை முன்வைக்கிறார்கள். இறைவனின் வல்லமையை, நம்

கவலையிலிருந்து விடுபட

“அல்லாஹ்வே! கவலை, துக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (புகாரீ)   இதுவும் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்றுதான். இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் கவனிக்கத்தக்கவை. இவை மனித வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை; மனிதனைச் செயல்பட

பயனற்ற கல்வி

“அல்லாஹ்வே! பயனற்ற கல்வி, உன்னை அஞ்சாத உள்ளம், நிறைவடையாத மனம், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. இதில் சொல்லப்பட்டுள்ள நான்கு விசயங்களும் நம் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துபவை. கல்வியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று

திடீர் தண்டனை

“அல்லாஹ்வே! உன் அருட்கொடைகள் அழிவதிலிருந்தும் நீ அளித்த ஆரோக்கியம் மாறுவதிலிருந்தும் திடீரென உன் தண்டனை வருவதிலிருந்தும் உன் கோபங்கள் அனைத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இது நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படுவது, நம்முடைய ஆரோக்கியம் மாறி நாம்

பிரார்த்தனைகள்

பிரார்த்தனை செய்யுங்கள். அதுவும் இறைவணக்கத்தின் ஒரு வடிவம்தான் என்கிறது இஸ்லாம். நாம் செய்யும் பிரார்த்தனை நம்முள் அசாதரண மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. பிரார்த்தனையின்மூலம் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விடுபடுகிறோம். இறைவனிடம் நம்பிக்கையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைகள் மனதின் அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றன. மனதின் அழுத்தங்களிலிருந்து