நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறை பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். உறவுகளால் நண்பர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்ள
பொறுப்புகளையும் சமூக வாழ்க்கைக்கான விதிகளையும் வெறுப்பவர்கள் வெகு விரைவில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள் அல்லது சமூகத்திற்கோ சக மனிதர்களுக்கோ பயனற்ற, தீங்கு விளைவிக்கின்ற சமூக விரோதிகளாக மாறி விடுகிறார்கள். மட்டுமீறிய சுயநலமும் தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் எதற்கும் இல்லை என்ற ஆணவப்போக்குமே அதற்குப் பின்னால் இருக்கும்
வாழ்க்கை வலிகளாலும் ஆனது. விதவிதமான வலிகள் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. உடலளவில் நாம் காயப்படுகிறோம். மனதளவில் நாம் காயப்படுகிறோம். சில வலிகள் உடனேயே மறைந்துவிடுகின்றன. சில வலிகள் நீண்ட நாட்கள்வரை நீடிக்கின்றன. சில வலிகள் அவ்வப்போது நம்மிடம் வந்து செல்கின்றன. வலிகள் என்ன செய்கின்றன? வலிகள் நம் இயலாமையை
ஒவ்வொரு துறைக்கும் அதற்கென மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த அற்புதங்களில் ஒன்று, மனித வாழ்க்கை சீர்குலையாமல் நேரான பாதையில் பயணிக்க அவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையாகும். இங்கு ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கின்றது. அல்லாஹ் மனிதர்களை ஒரே நிலையில் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப
சில வருடங்களுக்கு முன்னால் ஒருவரிடம் ஒரு பைக் வாங்கினேன். அதற்கான பணத்தை கொடுத்த பிறகு ஒரு மாதம் கழித்து எனக்கு என்னுடைய பைக் வேண்டும், நான் உங்களின் பணத்தை தந்து விடுகிறேன் என்றார். அவரது குரலில் கெஞ்சல் இருந்ததனால் நானும் எந்த மறுப்பும் இன்றி அவரது பைக்கை திருப்பி
மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள், அறபோதகர்கள் பொய்யர்களாக, நேர்மையற்றவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் அறிவுரைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்து மற்ற துறைகளுக்குப் பொருந்தும். துறைசார்ந்த
காலத்தைக் காட்டிலும் சிறந்த ஆசான் யாருமில்லை. காலம் நாம் எதிர்பார்க்காத, அறியாத பல விஷயங்களை நம் முன்னால் கொண்டு வருகிறது. நம் நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றுகிறது. நாம் சரியெனக் கண்டதைத் தவறெனக் காட்டுகிறது. நாம் தவறெனக் கண்டதை சரியெனக் காட்டுகிறது. நாம் விரும்பியதை வெறுக்கவும் வெறுத்ததை விரும்பவும் வைக்கிறது.
மனிதனுக்கு வழங்கப்படும் செல்வம், அறிவு, அதிகாரம் மற்றும் இன்னபிற அருட்கொடைகள் யாவும் சோதனையே என்று இஸ்லாம் கூறுகிறது. அவற்றின்மூலம் மனிதன் சோதிக்கப்படுகிறான். அவற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்கிறானா? வரம்பு மீறுகிறானா? அல்லது அவற்றின் மூலம் அவன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக நடந்துகொள்கிறானா? மறுமையின் நிலையான வீட்டைத் தேடுகிறானா? என்று
நாத்திகம் என்பது ஒரு மனநிலை. அது எதையும் எதிர்க்கத் துணிந்த கர்வமும் பிடிவாதமும் கொண்ட ஒரு மனநிலை. மற்றபடி ஒவ்வொருவரும் தம்மை இயக்கும் சக்தியை, தம் மீது ஆதிக்கம் செலுத்தும் இறைவனை உணரத்தான் செய்கிறார்கள். இதில் விதிவிலக்கானவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. மனிதன் யாரை ஏமாற்றினாலும் அவனால்
நாத்திகர்கள் மனிதம் பேசினாலும் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று நாம் கூறுவதற்குக் காரணம், எல்லாவித அறவிழுமியங்களையும் தகர்க்கும் அவர்களின் நாத்திக வாதம்தான். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஏன் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும்? ஏன் அநீதி இழைக்காமல் இருக்க வேண்டும்? கணவன் தன் மனைவிக்கோ மனைவி தன் கணவனுக்கோ