யூதர்களுக்கு நபியவர்களின் தூதுத்துவத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக இருந்தது அவர்களின் உயர்வு மனப்பான்மைதான். தங்களின் இனம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் தங்கள் இனத்தில் அவனுடைய தூதர்கள் அதிக அளவில் வந்திருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு வெளியிலிருந்து வேறு ஒரு தூதுத்துவமோ தூதரோ தேவையில்லை என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
யூதர்களின் வரம்புமீறல்கள், அவர்களின் கோணலான இயல்பு, தங்கள் தூதருடன் அவர்கள் நடந்துகொண்ட விதம், அற்புதங்களை, சான்றுகளைக் கண்டு உருகாத அவர்களின் இறுகிய உள்ளங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்திய பிறகு திருக்குர்ஆன் சட்டென முஸ்லிம்களை நோக்கி உரையாடுகிறது. இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு உடனே நம்பிக்கை கொள்வார்கள் என்று
இதற்குப் பிறகு வரக்கூடிய வசனங்கள் யூதர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டதையும் அவர்கள் செய்த வரம்புமீறல்களையும் பட்டியலிட்டுக் கொண்டு செல்கின்றன. وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ
“அவர்கள் நமக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள்” இது இங்கு செயல்படக்கூடிய பொதுவான நியதி. அல்லாஹ் யார் மீதும் அநீதி இழைப்பதில்லை. அவர்களுக்கு எது நன்மையோ அதைத்தான் அவன் செய்யும்படி கட்டளையிட்டுள்ளான். அவர்களுக்கு எது தீங்கிழைக்குமோ அதைவிட்டுத்தான் விலகி இருக்கும்படி அவன்
மீண்டும் அல்லாஹ் யூதர்களை ‘இஸ்ராயீலின் மக்களே’ என்று அழைத்து அவர்கள் மீது தான் பொழிந்த அருட்கொடையை, உலக மக்கள் அனைவரையும்விட அவர்களை சிறப்பித்ததை நினைத்துப் பார்க்குமாறு கூறுகிறான். பிறகு பல்வேறு காலகட்டங்களில் அவன் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளையும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் அவன் நினைவூட்டுகிறான். மற்ற
இதுவரையிலான வசனங்களில் யூதர்கள் மறைமுகமாக சுட்டப்பட்டிருந்தார்கள். அடுத்து வரக்கூடிய வசனங்கள் நேரடியாக யூதர்களை விளித்துப் பேசுகின்றன. அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நினைவூட்டப்படுகின்றன. இந்த வசனங்கள் அவர்களுக்கான நேரடியான அழைப்பையும் அவர்களைப் போன்ற இயல்புடையவர்களுக்கான மறைமுகமான அழைப்பையும் உள்ளடக்கி இருக்கின்றன. அவர்களைப்
பாவங்களிலிருந்து விடுபட நான் என்ன வேண்டும்? மனிதர்களிடம் இயல்பாகவே பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே ஷைத்தான் அவர்களை வழிகெடுக்க முயற்சிக்கிறான். பாவங்கள் செய்யாமல் வாழும் வாழ்க்கை இன்பங்கள் அற்ற துறவு வாழ்க்கை என்ற ஒரு மாயையை அவன் அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். அவர்கள் பாதுகாப்புக்
பூமியிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்ற கண்ணோட்டம் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு மனிதப் படைப்பின் ஆரம்பம் குறித்த விசயம் இடம்பெறுகிறது. மனிதனைப் படைப்பதற்கு முன்னால் அல்லாஹ் வானவர்களுடன் நிகழ்த்திய உரையாடல் குறித்தும் படைத்த பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்படுகிறது. அடுத்து வரக்கூடிய ஒன்பது வசனங்களில் மனித வாழ்வின் ஆதாரமான
வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது. அன்றாடம் செய்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு என்ன இருக்கிறது வாழ்வதற்கு? இந்த எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு உருவாகி இருக்காது என்று கருதுகிறேன். சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, விளையாடுவது, பொழுது போக்குவது, தூங்குவது என அத்தனை வேலைகளிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கும்
இந்த இடத்தில் யூதர்கள் முன்வைத்த ஒரு ஆட்சேபனைக்கு பதிலளிக்கப்படுகிறது. கொசு, ஈ, சிலந்திப்பூச்சி போன்ற அற்பமான உயிரினங்களைக் கொண்டா அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான் என்று அவர்கள் ஆட்சேபனை எழுப்பினார்கள். அவர்களின் நோக்கம், திருக்குர்ஆனுடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்புவதுதான். إِنَّ اللهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا