நட்பின், உறவின் கடமைகளில் ஒன்று, நண்பரின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குகொள்வது. உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்குபெறுவது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர் துன்பத்தில் இருக்கும்போது அவரது அருகில் இருப்பது, அவருக்கு ஆறுதல் கூறுவது அவரது பாரத்தை ஓரளவு குறைக்கும். மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.
அளவுக்கு மீறி புகழ்தலைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. பெரும்பாலும் அளவுக்கு மீறி புகழ்தலுக்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் மறைந்திருக்கும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஏதேனும் தேவையைப் பெறும் பொருட்டே இவ்வாறான துதிபாடலில் அவன் ஈடுபடுகிறான். பாராட்டுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. பாராட்டுவது விரும்பத்தக்கது. அது நாம் விரும்பக்கூடிய மனிதனுக்கு அளிக்கக்கூடிய
நமக்கு முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கண்ணியத்தின் வழி. இரண்டு இழிவின் வழி. ஒன்று நேரான வழி. இன்னொன்று தவறான வழி. நேரான வழியில் செல்வது, அதில் நிலைத்திருப்பது ஒரு வகையில் இலகுவானது. இன்னொரு வகையில் கடினமானது. அது இயல்பின் வழி என்ற அடிப்படையில், இவ்வுலக ஒழுங்குகளுடன்
நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ பல சமயங்களில் எனக்குப் பயனளிக்கின்றன. என்னுடைய எழுத்துக்களை டைரி வகையிலான எழுத்தாக மதிப்பிடுகிறேன். என் கண்ணோட்டங்களை, உணர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, விருப்பங்களை அப்படியே எழுத்தில் முன்வைக்கிறேன். அவற்றில் காணப்படும் தனிப்பட்ட தகவல்களை அகற்றி விடுகிறேன். ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட அனுபவங்கள்,
“அல்லாஹ் உங்களுக்குப் பங்கிட்டதைக் கொண்டு திருப்தியடையுங்கள். மனிதர்களில் தன்னிறைவு பெற்றவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.” இஸ்லாமிய உலகில் மிகவும் புகழ்பெற்ற, வெள்ளிக்கிழமை உரைகளில், அறிவுரைகளில் சொல்லப்படும் இந்த வாசகம் ஒரு நபிமொழியின் சிறிய பகுதி. இந்த வாசகத்தில் இடம்பெற்றுள்ள பங்கீடு என்ற வார்த்தை கவனிக்கத்தக்கது. அது சமநிலை என்ற பொருளையும்
திருக்குர்ஆன் இறைவனின் வேதமாகும். அது இறைவேதம் என்பதற்கு அதுவே சான்றாகவும் இருக்கின்றது. தன்னைப் போன்ற ஒரு வேதத்தை யாராலும் உருவாக்கி விட முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறது. நீங்கள் இந்தக் கூற்றை பொய்யெனக் கூறினால் அப்படியொரு வேதத்தை உருவாக்கிக் காட்டுங்கள் என்று அறைகூவல் விடுகிறது. அது விடுக்கும் அறைகூவல்
பெரும்பாலும் நல்ல பாரம்பரியமான குடும்பத்திலிருந்தே சிறந்த ஆளுமைகள் உருவாகி வருகிறார்கள். அன்றாடங்களில் சிக்கி உழல்பவர்களிலிருந்தும், ஒதுக்கப்பட்டவர்களிலிருந்தும் ஆளுமைகள் உருவாகி வருவது மிகவும் அரிது. விதிவிலக்குகள் இருக்கலாம். அன்றாடங்களில் மூழ்கி இருப்பவர்கள் உன்னதமான விசயங்கள் குறித்து சிந்திப்பதற்கு போதுமான நேரத்தையும் வளத்தையும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது முதன்மையான காரணங்களில் ஒன்று.
ஈர்ப்பு விதி என்கிறார்கள். நாம் விரும்புவது நம்மை வந்தடையும் என்பதுதான் அது. இதை மிகப் பெரிய பிரபஞ்ச இரகசியமாக முன்வைக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் நீங்கள் கேட்பதைக் கொடுக்கும். ஆகவே நீங்கள் விரும்புவதை மட்டும் கேட்டுக் கொண்டேயிருங்கள். உலகியல்வாதிகளைப் பொறுத்தவரை, இங்கு செயல்படும் விதிகளை அறிந்து கொண்டால் போதுமானது. அவற்றுக்குப்
சில மனிதர்களுடன் இருக்கும்போது நாம் அவர்களால் கவரப்படுகிறோம். அவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படுகிறோம். அவர்கள் நம்மிடம் எதுவும் கூறாவிட்டாலும் அவர்களின் இருப்புகூட நமக்குள் ஒரு வகையான தாக்கம் செலுத்துகிறது. இது நல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். கெட்ட மனிதர்களுக்கும் பொருந்தும். இரு சாராரிடமிருந்தும் அவர்களுக்கே உரிய அதிர்வுகள் (Vibes) வெளிப்படுகின்றன. இரு
திருக்குர்ஆனுக்கு எழுதப்பட்ட விரிவுரை நூல்கள் மரபு வழியாக நமக்குக் கிடைத்த அறிவுச் சொத்துகள் ஆகும். திருக்குர்ஆனுக்கு தொடர்ந்து விரிவுரைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முதல் தலைமுறை தொடங்கி ஒவ்வொரு தலைமுறையிலும் குர்ஆன் விரிவுரையாளர்கள் காணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தற்காலத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவு தஃப்ஸீர்கள் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பணி