அவரது பேச்சு மக்களுக்கு மத்தியில் பெரும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து அவர் பல வருடங்கள் மக்களுக்கு மத்தியில் பேசுபொருளாக இருந்தவர். அவரது மொழியும் பேசும் தொனியும் முன்வைத்த உதாரணங்களும் மக்களிடையே மிகவும் பிரபல்யமாகியிருந்தன. இனி தம்மால் முடியாதது எதுவும் இல்லை, தாம் நினைப்பதை மக்களுக்கு மத்தியில் எளிதில்
நாம் நோக்கத்தை உருவாக்க வேண்டியதில்லை. நம்முடைய நோக்கம் என்னவென்று கண்டடைய வேண்டியதிருக்கிறது. இக்கிகய் என்ற புத்தகத்தில் இடம்பெறும் வாசகம்தான் இது. மிகச் சரியான கருத்து இது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. ஒரு மனிதன் தன் நோக்கம் என்னவென்று கண்டடைந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது தேவையற்ற மன
நிச்சயமின்மை உங்களைச் சூழ்ந்திருக்கிறது. எப்படி உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது? நிச்சயமின்மை இந்த உலகின் இயல்புகளுள் ஒன்று. இது ஒவ்வொருவரையும் சூழ்ந்துள்ளது. இங்கு யாருக்கும் நிச்சயம் என்பது இல்லை. அடுத்த நிமிடம் என்ன நிகழும்? என்ன மாற்றங்கள் நிகழும்? எந்தத் துன்பம் வந்தடையும்? என்று யாருக்கும் தெரியாது. நாம்
என் மனம் அவரிடம் கேட்டது: உங்களை இந்த அளவு அதிகமாக வெளிப்படுத்துகிறீர்களே? அதனால் நீங்கள் பெறும் பயன்தான் என்ன? மக்கள் உங்களைக் குறித்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது அதன்மூலம் யாருக்கேனும் பயனளிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை, அப்படி எந்த நோக்கமும் இல்லை. எனக்கு பெருமித
அன்பு என்றால் அது உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டுமல்ல. சில சமயங்களில் உங்களுக்குச் சிறைச்சாலையாகவும் அமைந்துவிடுவதுண்டு. அதன் மற்றொரு புறம் கோபமும் வெறுப்பும் அதீத உரிமையும் இருக்கின்றன. இங்கு எந்தவொன்றும் இலவசமாகக் கிடைத்துவிடாது. அதற்குப் பகரமாக ஏதேனும் ஒன்றை நீங்கள் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒன்றை நீங்கள்
மனிதர்களுக்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. செல்வம், அறிவு, பதவி, அதிகாரம், மதம், சாதி, குலம் என எதையாவது அவர்கள் அதற்குப் பயன்படுத்தவே செய்கிறார்கள். இவையனைத்துக்கும் பின்னால் ஒளிந்திருப்பது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறியே. சாதியை ஒழித்துவிட்டால் சமத்துவம் நிலைநாட்டப்பட்டுவிடும் என்று