சில மனிதர்களுடன் இருக்கும்போது நாம் அவர்களால் கவரப்படுகிறோம். அவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படுகிறோம். அவர்கள் நம்மிடம் எதுவும் கூறாவிட்டாலும் அவர்களின் இருப்புகூட நமக்குள் ஒரு வகையான தாக்கம் செலுத்துகிறது. இது நல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். கெட்ட மனிதர்களுக்கும் பொருந்தும். இரு சாராரிடமிருந்தும் அவர்களுக்கே உரிய அதிர்வுகள் (Vibes) வெளிப்படுகின்றன. இரு
பிறருக்குக் காட்ட வேண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ பெருமையடிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் இருந்தால் மனிதர்கள் மிக அவசியமான பணிகளோடு மட்டும் நின்று கொள்வார்கள். அவற்றைத் தாண்டி வேறு எந்தப் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்காக செயல்படுவதைக் காட்டிலும் தங்களை மற்றவர்களின் முன்னால் நிரூபிக்க வேண்டும்,
நான் அவரை முன்னரே அறிவேன். அவர் இப்போது முழுமையாக மாறிவிட்டார் என்பதை உணர்கிறேன். உண்மையில் அவர் மாறிவிட்டரா அல்லது என் பார்வைதான் மாறிவிட்டதா என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் முன்னர் அவர் அப்படி இருக்கவில்லை. உற்சாகமானவராக, உற்சாகப்படுத்தக்கூடியவராகத்தான் இருந்தார். உற்சாகமானவர்கள் பழகுவதற்கு இலகுவானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் உற்சாகம்
அவமானப்படுத்தப்பட்ட மனிதர்களிடம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. தங்களை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்னால், தங்களைப் பொருட்படுத்தாதவர்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்து காட்டியே தீர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அப்படி வாழ்ந்து காட்டுவதையே தங்கள் வாழ்வின் இலட்சியமாக அவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவ்வாறு அவமானப்படுத்துபவர்கள்
வாசிக்கும் பழக்கம் எனக்கு இயல்பாகவே இருக்கிறது. இந்த பழக்கம் எப்படி என்னிடம் தொற்றிக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பேப்பரைக் கண்டாலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் மிக அதிகமாக இருந்தது என்பது மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது. என்னைச் சுற்றியிருந்த யாரிடமும் வாசிப்புப்
மனதிற்குத் தெளிவாகத் தெரியும், நட்பு கொள்வதற்காக, உறவைப் பலப்படுத்துவற்காக, நட்பையும் உறவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது. நாம் ஒருவருடன் நட்பை, உறவை விரும்புகிறோம் எனில் நாம் ஒருவருடைய நட்பை, உறவை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம் எனில் அதற்கு இசைவான, உகந்த வார்த்தைகளும் செயல்களும்தான் நம்மிடமிருந்து