“நித்திய ஜீவனே! நிலையானவனே! உன் அருளை நான் வேண்டுகிறேன். என் விவகாரங்கள் அனைத்தையும் நீ சீர்படுத்துவாயாக. கண்சிமிட்டும் நேரம் அளவுக்குக்கூட என்னை என் மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிடாதே” (நஸயீ, ஹாகிம்) காலையும் மாலையும் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் இந்த பிரார்த்தனையை முன்வைக்கிறார்கள். இறைவனின் வல்லமையை, நம்
“அல்லாஹ்வே! கவலை, துக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (புகாரீ) இதுவும் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்றுதான். இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் கவனிக்கத்தக்கவை. இவை மனித வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை; மனிதனைச் செயல்பட
“அல்லாஹ்வே! பயனற்ற கல்வி, உன்னை அஞ்சாத உள்ளம், நிறைவடையாத மனம், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. இதில் சொல்லப்பட்டுள்ள நான்கு விசயங்களும் நம் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துபவை. கல்வியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று
“அல்லாஹ்வே! உன் அருட்கொடைகள் அழிவதிலிருந்தும் நீ அளித்த ஆரோக்கியம் மாறுவதிலிருந்தும் திடீரென உன் தண்டனை வருவதிலிருந்தும் உன் கோபங்கள் அனைத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இது நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படுவது, நம்முடைய ஆரோக்கியம் மாறி நாம்
பொறுப்புகளையும் சமூக வாழ்க்கைக்கான விதிகளையும் வெறுப்பவர்கள் வெகு விரைவில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள் அல்லது சமூகத்திற்கோ சக மனிதர்களுக்கோ பயனற்ற, தீங்கு விளைவிக்கின்ற சமூக விரோதிகளாக மாறி விடுகிறார்கள். மட்டுமீறிய சுயநலமும் தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் எதற்கும் இல்லை என்ற ஆணவப்போக்குமே அதற்குப் பின்னால் இருக்கும்
தன்மானத்திற்கும் செருக்கிற்கும் மத்தியில் சிறிய இடைவெளிதான் உள்ளது. செருக்கை தன்மானம் என எண்ணுவோரும் இருக்கிறார்கள். ஒருவனிடம் இருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை அவனிடம் செருக்கை உருவாக்கலாம். செல்வம், அதிகாரம், அறிவு, அழகு போன்றவை. செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு எப்படி தவறான பண்புகளோ அதேபோன்று அறிவுச் செருக்கும் தவறான