குறும்பதிவுகள்

நோன்பின் மகிழ்ச்சி

நோன்பாளி இரண்டு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறார். ஒன்று நோன்பு துறக்கும் சமயத்தில். மற்றொன்று தம் இறைவனைக் காணும் சந்தர்ப்பத்தில். இது நபியவர்கள் கூறியது. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, நோன்பு முடிகிறது என்பதை எண்ணும்போது; இனி உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியதில்லை என்பதை எண்ணும்போது. கிட்டத்தட்ட இந்த வாழ்வும் இதைப் போன்றதுதான்.

உடையும் பிம்பம்

ஒருவரைக் குறித்து என்னுள் இருக்கும் இருக்கும் பிம்பம் திடீரென அவரிடமிருந்து வெளிப்படும் ஒரு செயலால், அவரைக் குறித்து கேள்விப்படும் ஒரு செய்தியால் உடைந்துவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை எப்படி அணுகுவது? இங்கு நாம் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள். யாராலும் பாவம் செய்யாமல்

குர்ஆன் வாசிப்பு

இரண்டு வகை வாசிப்பு இருக்கிறது. ஒன்று, மேலோட்டமான வாசிப்பு. இன்னொன்று ஆழமான வாசிப்பு. மேலோட்டமான வாசிப்பு என்பது மிக வேகமாக வாசித்துக் கொண்டே செல்வதும் வாசித்தவற்றை அசைபோடாமல் இருப்பதும் ஆகும். ஆழமான வாசிப்பு என்பது நிறுத்தி நிதானமாக வாசிப்பதும் வாசித்தவற்றை அசைபோடுவதும் ஆகும். ஆழமான வாசிப்பு சிந்தனையை உள்ளடக்கியதாக

அறிவுரை

எந்தவொரு அறிவுரையும் சொல்லப்படாமல் இல்லை. அத்தனை அறிவுரைகளும் மனிதர்களால் சொல்லப்பட்டு விட்டன, தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. ஆனாலும்  சிலரிடமிருந்து அவை வெளிப்படும்போது நம்மை ஈர்க்கின்றன. அவற்றால் நாம் கவரப்படுகிறோம். அவை நமக்குப் புதியவையாகத் தெரிகின்றன. அவை பின்பற்றப்பட வேண்டியவை என்று நாம் எண்ணுகிறோம். அறிவுரை உரிய மனிதனிடமிருந்து

சமநிலைக்குலைவு

பெரும் பெரும் துன்பங்களை எல்லாம் எளிதாகக் கடந்தவர் அவர். அவரது மனதில் இருந்த வெறி தடைகள் எல்லாவற்றையும் துச்சமென நினைத்து அவரைக் கடக்க வைத்தது. அவர் அடைய நினைத்த எல்லையை ஓரளவுக்கு அடைந்து விட்டார். மனதில் முன்னர் இருந்த விடாப்படியான ஆசை அல்லது வெறி அடங்கிவிட்டது. மனம் சமநிலைக்குத்

தேவையற்ற பயம்

நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருந்து விட்டால் அடுத்து ஒரு துன்பம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த பயம் எதிர்மறைச் சிந்தனையின் விளைவா? மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறிமாறி வரக்கூடியவை. மகிழ்ச்சிக்குப் பிறகு துன்பம் வரலாம். துன்பத்திற்குப் பிறகு மகிழ்ச்சி ஏற்படலாம். மகிழ்ச்சியுடன் துன்பமும் இருக்கலாம்.