குறும்பதிவுகள்

சலிப்பாக இருக்கிறது

வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது. அன்றாடம் செய்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு என்ன இருக்கிறது வாழ்வதற்கு? இந்த எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு உருவாகி இருக்காது என்று கருதுகிறேன். சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, விளையாடுவது, பொழுது போக்குவது, தூங்குவது என அத்தனை வேலைகளிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கும்

மனக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும்

நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம். மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின் ஆரம்ப கட்டம் மன அழுத்தத்திலிருந்து அல்லது

உயிரோட்டமான தொழுகை

நம்பிக்கையாளனுக்கு தொழுகை உடலின் இதயத்தைப் போல மிக அவசியமான ஒன்றாகும். இதயத்தில் ஏற்படும் பாதிப்பு எப்படி உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துமோ அப்படித்தான் தொழுகையில் ஏற்படும் குறைபாடும் அலட்சியமும் அவனுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழுகையை விடுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டு தூரமாகி  விடுவான். இதுதான் நம்பிக்கையாளர்களையும்

உள்ளத்தின் மொழி

உள்ளத்தின் மொழி என்று ஒன்று இருக்கிறதா? ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொள்ள முடியுமா? எவ்வித வெளிப்படையான தொடர்பும் இன்றி அவை இணைந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படியொரு மொழி இருக்கிறது. ஆனால் ஒத்திசைவான, பிரியம்கொண்ட உள்ளங்களுக்கு மத்தியில் மட்டுமே அது சாத்தியமாகிறது. உள்ளுணர்வுகள் கடத்தப்படுகின்றன. எப்படி அவை

தனித்திருத்தல்

உங்களால் தனித்திருக்க முடிகிறதா? யாருடனும் எந்தவொன்றுடனும் அல்லாமல் உங்களுடன் மட்டும் உங்களால் தனித்திருக்க முடிகிறதா? அப்படி உங்களால் தனித்திருக்க முடிந்தால் நீங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீர்கள், உங்கள் மனம் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் பலரும் தனித்திருத்தலை அஞ்சுகிறார்கள். அவர்கள் தனித்திருக்கும் சமயங்களில் செல்ஃபோனில், சமூக

பிரபல்யம் என்னும் போதை

பிரபல்யம் சில உலகியல் இலாபங்களைக் கொண்டு வந்தாலும் அது ஒரு வகையில் துன்பம் தரக்கூடியது. அது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடியது; அதீத சுயமோகத்தை உருவாக்கக்கூடியது. அதீத சுயமோகம் ஆளுமையைச் சிதைத்துவிடக்கூடிய அளவுக்கு கொடியது. அதுவும் கர்வம் உண்டாக்கும், அறிவை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு வகையான போதைதான். தாம் அடைந்த