“உங்களிலுள்ள பலவீனர்களின் காரணமாகவே உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது; நீங்கள் உதவி செய்யப்படுகிறீர்கள்.” தம் திறமையின் காரணமாகத்தான் தமக்கு எல்லாம் கிடைக்கிறது என்று எண்ணிய ஒருவருவருக்கு நபியவர்கள் கூறிய அறிவுரை இது. உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள பலவீனர்கள் உங்களுக்குச் சுமைகள் அல்ல. மாறாக அவர்களின் காரணமாக உங்களின் வாழ்வாதாரத்தில் விசாலம்
எல்லாவற்றுக்கும் நாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியுமா? விவாதத்தின் மூலம் நம்மால் ஒரு தீர்வை எட்டிவிட முடியுமா? விவாதம் தீர்வை நோக்கி இட்டுச்செல்லக்கூடியது அல்ல. அது முடிவிலியாக நீண்டு கொண்டே செல்லக்கூடியது. அது ஒரு வகையான கருத்தியல் யுத்தம். தோல்வியடைந்தவர்கள் காழ்ப்புகளை சுமந்துகொண்டு பின்வாசல் வழியாக அல்லது வேறொரு வடிவில்
“எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னிக்கவில்லையென்றால், எங்கள் மீது கருணை காட்டவில்லையென்றால் நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.” (7:23) இது ஆதம் (அலை) பாவம் செய்த பிறகு இறைவனிடம் மன்னிப்புக்கோரி செய்த பிரார்த்தனை. இதுதான் முதல் பிரார்த்தனையும்கூட. இறைவனின் கட்டளையை மீறுவது பாவம்
“நித்திய ஜீவனே! நிலையானவனே! உன் அருளை நான் வேண்டுகிறேன். என் விவகாரங்கள் அனைத்தையும் நீ சீர்படுத்துவாயாக. கண்சிமிட்டும் நேரம் அளவுக்குக்கூட என்னை என் மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிடாதே” (நஸயீ, ஹாகிம்) காலையும் மாலையும் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் இந்த பிரார்த்தனையை முன்வைக்கிறார்கள். இறைவனின் வல்லமையை, நம்
“அல்லாஹ்வே! கவலை, துக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (புகாரீ) இதுவும் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்றுதான். இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் கவனிக்கத்தக்கவை. இவை மனித வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை; மனிதனைச் செயல்பட
“அல்லாஹ்வே! பயனற்ற கல்வி, உன்னை அஞ்சாத உள்ளம், நிறைவடையாத மனம், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. இதில் சொல்லப்பட்டுள்ள நான்கு விசயங்களும் நம் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துபவை. கல்வியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று