எந்தவொரு அறிவுரையும் சொல்லப்படாமல் இல்லை. அத்தனை அறிவுரைகளும் மனிதர்களால் சொல்லப்பட்டு விட்டன, தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. ஆனாலும் சிலரிடமிருந்து அவை வெளிப்படும்போது நம்மை ஈர்க்கின்றன. அவற்றால் நாம் கவரப்படுகிறோம். அவை நமக்குப் புதியவையாகத் தெரிகின்றன. அவை பின்பற்றப்பட வேண்டியவை என்று நாம் எண்ணுகிறோம். அறிவுரை உரிய மனிதனிடமிருந்து
பெரும் பெரும் துன்பங்களை எல்லாம் எளிதாகக் கடந்தவர் அவர். அவரது மனதில் இருந்த வெறி தடைகள் எல்லாவற்றையும் துச்சமென நினைத்து அவரைக் கடக்க வைத்தது. அவர் அடைய நினைத்த எல்லையை ஓரளவுக்கு அடைந்து விட்டார். மனதில் முன்னர் இருந்த விடாப்படியான ஆசை அல்லது வெறி அடங்கிவிட்டது. மனம் சமநிலைக்குத்
நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருந்து விட்டால் அடுத்து ஒரு துன்பம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த பயம் எதிர்மறைச் சிந்தனையின் விளைவா? மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறிமாறி வரக்கூடியவை. மகிழ்ச்சிக்குப் பிறகு துன்பம் வரலாம். துன்பத்திற்குப் பிறகு மகிழ்ச்சி ஏற்படலாம். மகிழ்ச்சியுடன் துன்பமும் இருக்கலாம்.
நெருங்கிய உறவுகளிடமிருந்து உணரும் புறக்கணிப்பின் வலியை எப்படி எதிர்கொள்வது? மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் என்பதை ஒருவர் மற்றவரைச் சுரண்டி வாழக்கூடியவர்கள் என்றும் கூறலாம். இரண்டுக்கும் மத்தியில் சிறிய அளவுதான் வேறுபாடு காணப்படுகிறது. சில சமயங்களில் இரண்டும் ஒன்றுபோலவே தோற்றம் தருகிறது. நாம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அது
நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? நண்பர் ஒருவரின் கேள்வி இது. கோபத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. சில தற்காலிகமானவை. சில நிரந்தரமானவை. தற்காலிக காரணங்களினால் உருவாகும் கோபங்களிலிருந்து விடுபடுதல் எளிது. உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல் கொஞ்சம் தள்ளிப் போட்டாலே அவற்றுள் பெரும்பாலானவை
வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு பலம்! அதுவும் உரியவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அசுர பலம் கொண்டவையாக மாறிவிடுகின்றன. பயமும் பதற்றமும் கவலையும் உள்ளத்தின் நோய்கள். அவை உடலில் நோய்களை ஏற்படுத்தும் வலிமையான நோய்கள். நம்பிக்கையூட்டும், ஆறுதலளிக்கும் வார்த்தைகள் பயத்தை, பதற்றத்தை, கவலையைப் போக்கி விடுகின்றன. இந்த வகையில் வார்த்தைகள் அற்புதமான நிவாரணிகள்.