குறும்பதிவுகள்

அதிக வெளிச்சம்

என் மனம் அவரிடம் கேட்டது: உங்களை இந்த அளவு அதிகமாக வெளிப்படுத்துகிறீர்களே? அதனால் நீங்கள் பெறும் பயன்தான் என்ன? மக்கள் உங்களைக் குறித்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது அதன்மூலம் யாருக்கேனும் பயனளிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை, அப்படி எந்த நோக்கமும் இல்லை. எனக்கு பெருமித

ஆன்மாவின் இன்பம்

அன்பு என்றால் அது உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டுமல்ல. சில சமயங்களில் உங்களுக்குச் சிறைச்சாலையாகவும் அமைந்துவிடுவதுண்டு. அதன் மற்றொரு புறம் கோபமும் வெறுப்பும் அதீத உரிமையும் இருக்கின்றன. இங்கு எந்தவொன்றும் இலவசமாகக் கிடைத்துவிடாது. அதற்குப் பகரமாக ஏதேனும் ஒன்றை நீங்கள் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒன்றை நீங்கள்

ஆதிக்க வெறியும் கர்வமும்

மனிதர்களுக்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. செல்வம், அறிவு, பதவி, அதிகாரம், மதம், சாதி, குலம் என எதையாவது அவர்கள் அதற்குப் பயன்படுத்தவே செய்கிறார்கள். இவையனைத்துக்கும் பின்னால் ஒளிந்திருப்பது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறியே. சாதியை ஒழித்துவிட்டால் சமத்துவம் நிலைநாட்டப்பட்டுவிடும் என்று

வாழ்வது போன்று நடிப்பது

அதிகம் காட்டிக் கொள்பவர்கள் ஏன் அதற்கு மாறாக இருக்கிறார்கள்? அவர்கள் உணரும் தனிமைதான் அவர்களை அதிகம் காட்டிக் கொள்ளத் தூண்டுகிறதா? தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்ளும் தம்பதியினர் உண்மையில் அதற்கு மாறானவர்களாக இருக்கிறார்களே! அது ஏன்? சமூக ஊடகங்களில், பொதுத் தளங்களில் தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்பவர்கள் எல்லாம்

தெளிவும் உறுதியும்

ஒரு விசயத்தை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் எனில் அதனை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதியான, தெளிவான குரலில் உங்களால் முன்வைக்க முடிந்தால் அது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் மற்றவர்களிடத்திலும் தன்னியல்பாகச் சென்றடைந்து விடும். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும் என்பது இங்கு செயல்படும் விதி. அந்த வார்த்தையில் தெளிவும்

மௌனத்தின் மொழி

“பேசினால் நல்லதையே பேசுங்கள். இல்லையெனில் மௌனமாக இருங்கள்.” (நபிமொழி) நல்லதையே பேச வேண்டும். நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருக்க வேண்டும். இங்கு மௌனம் வலியுறுத்தப்பட்டதல்ல. உங்களால் நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருங்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாம் மௌனத்தை ஒரு வணக்க வழிபாடாக முன்வைக்கவில்லை.