திருக்குர்ஆன் தெளிவுரை

அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழி

وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللهُ أَوْ تَأْتِينَا آيَةٌ كَذَلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ تَشَابَهَتْ قُلُوبُهُمْ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَلَا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ وَلَنْ

இப்ராஹீமின் பிரார்த்தனை

யூதர்கள், கிருஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகிய மூவரும் ஒன்றிணையும் புள்ளி இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம். இப்ராஹீமின் மகனான இஸ்மாயிலிடமிருந்து அறபுக்கள் உருவாகிறார்கள். அவரது இன்னொரு மகனான இஸ்ஹாக்கிடமிருந்து யூதர்கள் உருவாகிறார்கள். யூதர்கள் தங்களை இப்ராஹீமின் வாரிசு என்றும் அதனடிப்படையில் தூதுத்துவம் தங்கள் சமூகத்தாருக்கு மட்டுமே உரியது என்றும் சொல்லிக்

குறுங்குழு வாதங்களற்ற சமூகம்

وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَابَنِيَّ إِنَّ اللهَ

கிப்லா மாற்றமும் பெரும் பொறுப்பும்

சாட்சியம் கூற மறுக்கும், தாங்கள் அறிந்தவற்றுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதோடு முதல் பாகம் நிறைவடைகிறது. அடுத்து வரும் வசனங்கள் மனிதர்களுக்கு வழிகாட்டும் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு அந்த பொறுப்பு முஸ்லிம்களின் வசம் ஒப்படைக்கப்படுவதையும் அந்த பொறுப்பை சுமப்பதற்கு அவர்கள் பெற்றிருக்க வேண்டிய

மகத்தான அருட்கொடை

உண்மையை அறிந்து கொண்டே அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்றால் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் அப்படித்தான். அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களுக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. அதில்தான் அவர்கள் செல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது நற்செயல்களில் போட்டி போட்டுக் கொண்டு உங்களை ஈடுபடுத்துவதுதான். இதுதான் சரியான

இழப்புகளை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

முஸ்லிம் சமூகத்திற்கு மனித சமூகத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு அது அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் பாதையில் வரக்கூடிய சவால்களை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிப்லா மாற்றத்திற்குப் பிறகுதான் பத்ருப்போர் நிகழ்ந்தது. பத்ருப்போர் நிகழும் என்று தெரிந்துதான் அதற்கு முன்னரே அதனால்

மார்க்கத்தைப் பின்பற்றுவதும் பின்பற்றுவதுபோன்று காட்டிக் கொள்வதும்

மார்க்கத்தைப் பின்பற்றுதல் வேறு, மார்க்கத்தைப் பின்பற்றுவதாக காட்டிக் கொள்வது வேறு. யூதர்களிடமும் இருந்தது பிந்தையது. மார்க்கத்தின் அசலான அம்சங்களை விட்டுவிட்டு தங்களுக்குப் பிடித்தமான, இலகுவான சில சடங்குகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு தங்களை மார்க்கப் பற்றுள்ளவர்களாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். மனதின் கஞ்சத்தனத்தனத்திலிருந்து விடுபடுவதற்கோ, மனதின் தீய இச்சைகளை

வேதக்காரர்களிடம் பெறப்பட்ட வாக்குறுதி

அடுத்து யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் அவர்களின் தூதர்கள்மூலம் அல்லாஹ் பெற்ற வாக்குறுதி நினைவூட்டப்படுகிறது. இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரும்போது அவர்களை உண்மைப்படுத்த வேண்டும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் உறுதிமொழி பெறப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழி குறித்து தவ்ராத்திலும் இன்ஜீலிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால்

கோணலான மனமும் பிழையான கண்ணோட்டமும்

அடுத்து வேதக்காரர்களின் இன்னொரு வழிகேடும் அதற்குப் பின்னால் இருக்கும் பிழையான கண்ணோட்டமும் எடுத்துரைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் அவர்களிலும் தங்கள் வேதத்தின்படி நியாயமாக நடந்து கொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்களில் தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்களில் ஒரு தரப்பினர்தான் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.  وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ

வேதக்காரர்களுக்கான அழைப்பு

கிருஸ்தவர்களுக்கு எதிரான உறுதியான ஆதாரம் நிலைநிறுத்தப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் முபாஹலாவின் பக்கம் அழைக்கப்பட்டு அவர்களுடனான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு யூதர்கள், கிருஸ்தவர்கள் இரு சாராரும் வேதக்காரர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்பட்டு உரையாடப்படுகிறார்கள். அவர்கள் வேதத்தை கற்பதாலும் கற்பிப்பதாலும் அதன் போதனைகளில் இன்னும் மீதமிருக்கின்ற தவ்ஹீதின்

ஈசா நபி தொடர்பான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஈசா நபி இவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்திய பிறகும் தம்முடைய தூதுத்துவ நோக்கங்களை தெள்ளத் தெளிவான மொழியில் முன்வைத்த பிறகும் இஸ்ரவேல் சமூகத்திலுள்ள அறிஞர்களும் தலைவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து நிராகரிப்பும் எதிர்ப்பும் சூழ்ச்சியும் வெளிப்படுவதை அவர் உணர்ந்தார். அவர்களை விட்டுவிட்டு அந்த சமூகத்திலுள்ள எளிய மனிதர்களை

ஆபத்தான சூழலும் அல்லாஹ்வின் பாதுகாப்பும்

எப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமிய வெறுப்புத் தொழில் பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. வெறுப்புத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் இஸ்லாத்தை எதிர்ப்பதற்கான காரணிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வும் அதற்கேற்றவாறு திரிக்கப்படுகிறது. வெவ்வெறு கோணங்களில் அந்த நிகழ்வுகள் அலசப்படுகின்றன. ஒவ்வொரு கோணத்திலும் இஸ்லாம் ஆபத்தானது என்பது

அற்புதமான நிகழ்வுகள் – 2

மர்யமிடமும் வானவர்கள் வருகிறார்கள், ஸகரிய்யாவிடம் வந்ததைப்போல. அவருக்கும் ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறார்கள். ஸகரிய்யா ஆச்சரியமடைந்ததைப்போல மர்யமும் ஆச்சரியமடைகிறார். இரண்டுமே மனித அறிவின் சாத்தியத்தைக் கடந்தவை. அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு மட்டுமே புரிந்துகொள்ள முடியுமானவை. கிருஸ்தவர்கள் ஈசாவை இறைவனின் மகன் என்றும் மர்யமை தெய்வீகக் குழந்தையை பெற்றெடுத்த

அற்புதமான நிகழ்வுகள் -1

இங்கிருந்துதான் அத்தியாயத்தின் அசலான கருப்பொருள் தொடங்குகிறது. இம்ரானின் குடும்பத்தாருடைய வரலாறு உள்ளத்தை ஈர்க்கும் அற்புதமான வகையில் எடுத்துரைக்கப்படுகிறது. அந்த வரலாற்றினூடே ஈசா நபி குறித்தும் அவரது தாயார் மர்யம் குறித்தும் கிருஸ்தவர்கள் உருவாக்கி வைத்திருந்த பிழையான நம்பிக்கைகளுக்கும் அவர்கள் முன்வைத்த ஆட்சேபனைகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. இந்த உண்மையான வரலாறு தவ்ஹீதின்

அல்லாஹ்வே! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே!

யூதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இறுதித் தூதர் முஹம்மது நபியவர்கள் தங்கள் இனத்திலிருந்து வரவில்லை என்பதுதான். நுபுவ்வத் எனப்படும் தூதுத்துவம் தங்கள் இனத்தாருக்கு மட்டுமே உரியது என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைக் குறித்து ‘இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள்’ என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களை

இஸ்லாம் மட்டுமே ஒரே வழி

தக்வா உடையவர்களுக்காக காத்திருக்கும் நிலையான இன்பங்களும் அவர்களின் பண்புகளும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதன் அடித்தளமான தவ்ஹீதும் அந்த தவ்ஹீதை இஸ்லாம் மட்டுமே உள்ளடக்கி இருக்கிறது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற அதே பாணியைத்தான் இந்த வசனமும் கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த வசனம் அல்லாஹ்வின் சாட்சியத்தையும் அவன் நீதியை