குறும்பதிவுகள்

துரோகம்

ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதற்கு ஒருவர் மற்றவருக்கு விசுவாசமாக இருப்பதும் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருப்பதும் மிகவும் அவசியம். அந்த விசுவாசமே குடும்ப வாழ்வுக்கான அடித்தளம். அப்படியில்லாத பட்சத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்திருக்கவில்லையெனில் வேறு ஏதேனும் நிர்ப்பந்தம் இல்லையெனில் அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். கள்ளக்காதலும் முறையற்ற உறவுகளும் குடும்ப வாழ்வின்

மலட்டு விவாதம்

மலட்டு விவாதம் என்ற தலைப்பில் எகிப்திய எழுத்தாளர் அஹ்மது அமீனின் கட்டுரை ஒன்று இருக்கிறது. தலைப்பே கட்டுரையின் கருவை கச்சிதமாக சொல்லி விடுகிறது. ஒரு விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு, அதன் சாதக, பாதக அம்சங்களை அலசுவதற்கு விவாதங்கள் பயனளிக்கலாம். விவாதத்திற்கான எல்லை இதுதான். இந்த எல்லையில் நின்று,

காதல் வயப்படுவது…

மனிதர்கள் காதல்வயப்படுவது எதிர்பாராத, அற்புதமான ஒரு நிகழ்வுதான். தான் அனுபவிக்கும் ஆரம்பகட்ட இனிமையை மனிதன் மீண்டும் அனுபவிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் உச்சகட்ட போதை. அந்த போதையில் பலர் தங்களின் நெருங்கிய நண்பர்களை, உறவினர்களை இழக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட காலம்வரை நீடிக்கும்

அல்ஹம்துலில்லாஹ்

“படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” நம்பிக்கையாளனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான வாசகம் இது. அவன் மீண்டும் மீண்டும் இந்த வாசகத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். நன்றியுணர்ச்சி அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த தனக்கு அல்லாஹ்தான் இருப்பும் இங்கு வாழ்வதற்கான

தக்வா என்பது

“யார் தக்வாவோடு நடந்து கொள்வாரோ நாம் அவருக்கு ஒரு வெளியேறுமிடத்தை ஏற்படுத்துவோம். அவர் அறியாத புறத்திலிருந்து அவருக்கு நாம் வாழ்வாதாரம் வழங்குவோம்.” (65:2,3) இந்த வசனத்தை படித்த நாளிலிருந்து நான் மறக்கவேயில்லை. அந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு திறப்பு, ஒரு மகிழ்ச்சி இன்றளவும் அப்படியே நினைவிருக்கிறது. பிரச்சனைகளில், சிரமங்களில்

பேராசையும் நுகர்வு வெறியும்

மற்றவர்களிடம் காட்டி பெருமிதம் கொள்ள வேண்டும், அவர்களோடு போட்டி போட்டு தனக்கென ஒரு கௌரவத்தை உருவாக்க வேண்டும், பெரும் புகழும் அங்கீகாரமும் பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லையெனில் மனிதன் தனக்குத் தேவையானவற்றைத் தவிர வேறு எதையும் சம்பாதிக்க மாட்டான். அவனுடைய பேராசையும் நுகர்வு வெறியும் பெருமளவு