இமாம் இப்னு கைய்யும் கூறுவது போன்று, மனித மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை இறை நினைவைக் கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். வேறு எதனைக் கொண்டும் அதனை நிரப்ப முடியாது. இறைவனை அறிந்துகொள்ளாத, இறைவனுக்குக் கட்டுப்படாத உள்ளம் காரிருளில் வழிதெரியாமல் தடுமாறித் திரியும். அது காணும்
சட்டென மனதின் திரை அகன்று விட்டால் மனதில் உள்ள அனைத்தும் அப்படியே கொட்டத் தொடங்கி விட்டால் என்னாவாகும்? யாரும் யாருடனும் நட்பிலும் உறவிலும் இருக்க முடியாது. மனிதர்கள் இணைந்திருக்க முடியாது. மனித அகத்தில் கொந்தளிக்கும் உணர்வுகள் அப்படியே வெளிப்படத் தொடங்கி விடும். மனதின் ஒவ்வொன்றையும் வடிகட்டி அவசியமானதை மட்டும்
ஒரு சமூகத்தில் உதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அந்தச் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. உதிரிகள் என்பவர்கள் கூட்டு வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி வாழ்பவர்கள்; சமூகத்தின் எந்த விதியையும் மதிக்காதவர்கள்; மீறலை விரும்பக்கூடியவர்கள்; அது தங்களின் உரிமை என்று கருதக்கூடியவர்கள்; தங்களின் மன விருப்பங்களின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள். இந்த உதிரிகளிடம் தனித்து
அவரது பேச்சு மக்களுக்கு மத்தியில் பெரும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து அவர் பல வருடங்கள் மக்களுக்கு மத்தியில் பேசுபொருளாக இருந்தவர். அவரது மொழியும் பேசும் தொனியும் முன்வைத்த உதாரணங்களும் மக்களிடையே மிகவும் பிரபல்யமாகியிருந்தன. இனி தம்மால் முடியாதது எதுவும் இல்லை, தாம் நினைப்பதை மக்களுக்கு மத்தியில் எளிதில்
நாம் நோக்கத்தை உருவாக்க வேண்டியதில்லை. நம்முடைய நோக்கம் என்னவென்று கண்டடைய வேண்டியதிருக்கிறது. இக்கிகய் என்ற புத்தகத்தில் இடம்பெறும் வாசகம்தான் இது. மிகச் சரியான கருத்து இது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. ஒரு மனிதன் தன் நோக்கம் என்னவென்று கண்டடைந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது தேவையற்ற மன
நிச்சயமின்மை உங்களைச் சூழ்ந்திருக்கிறது. எப்படி உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது? நிச்சயமின்மை இந்த உலகின் இயல்புகளுள் ஒன்று. இது ஒவ்வொருவரையும் சூழ்ந்துள்ளது. இங்கு யாருக்கும் நிச்சயம் என்பது இல்லை. அடுத்த நிமிடம் என்ன நிகழும்? என்ன மாற்றங்கள் நிகழும்? எந்தத் துன்பம் வந்தடையும்? என்று யாருக்கும் தெரியாது. நாம்