இஸ்லாமிய அழைப்பியலின் பாதை எளிதானது அல்ல. மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாதையில் சென்றுவிட முடியாது. மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் அந்தப் பாதையில் நீடிக்க முடியாது. உண்மையில் அது அல்லாஹ் அளிக்கும் பெரும் பாக்கியம். அந்த பாக்கியத்தைப் பெறுவதற்கு முன்னர் அவர்கள் சோதனைகளைக் கடக்க வேண்டும். சோதனைகளை வெற்றிகரமாக கடந்தவர்கள்
இஸ்லாமிய அழைப்பியல் என்பது ஒரு மறைமுக அதிகாரமும்கூட. மக்கள் அழைப்பாளர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை நம்புகிறார்கள். அவர்களிடம் இஸ்லாம் என்ற அளவுகோல் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால் அவர்களை நம்புகிறார்கள். சிலர் அவர்களின் பணிக்கு நிதியுதவி செய்கிறார்கள். சிலர் அவர்களுக்குச் சேவகம் செய்கிறார்கள். சிலர்
உங்களிடம் நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது எனில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் இருப்பவை பாதுகாக்கப்படும். எதிர்பாரா புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள். நான் கூறுவது படைத்த இறைவன் உங்களுக்கு அளித்த அருட்கொடையை உணர்ந்து நன்றி செலுத்தும் பண்பு. அதுதான் முதன்மையானது. மற்றவை அதற்குப் பின்னால்
ஒருவர் மற்றவருடன் எப்படி இணைகிறார்கள்? ஒருவர் மற்றவரைவிட்டு எப்படி விலகிச் செல்கிறார்கள்? அன்பு ஈர்க்கும். வெறுப்பு விலக்கி வைக்கும். தேவை ஈர்க்கும். தேவையின்மை விலக்கி வைக்கும். ஒத்திசைவு ஈர்க்கும். ஒத்திசைவின்மை விலக்கி வைக்கும். நிர்ப்பந்தமும் சூழலும்கூட இணைப்பையும் விலகலையும் ஏற்படுத்தும். ஆனால் அவை வலுவான, நீடிக்கக்கூடிய காரணிகள் அல்ல.
எந்தவொரு பெரும் செயலும் மிக இலகுவாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் அது நிகழ்ந்த பிறகுதான் அது இலகுவாக நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது நிகழ்வதற்கு முன்னர்வரை அது கடினமான அல்லது நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய
அதிகப்படியான செய்திகள் நம்மை பெரும் குழப்பத்திலும் கடும் மனச்சோர்விலும் ஆழ்த்தும். எந்த அளவு நாம் நம்முடைய வாழ்க்கையை சிறியதாக அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவு நாம் நிம்மதியாக இருக்கலாம். தொடர்ந்து உலகச் செய்திகள் முதற்கொண்டு உள்ளூர் செய்திகள்வரை அறிந்து கொண்டு அலசுபவர்கள் அச்சுறுத்தும் எதிர்மறை மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். ஏனெனில்