திருக்குர்ஆன் தெளிவுரை

தூதுத்துவ வரலாறு

நிராகரிப்பாளர்களின், நயவஞ்சர்களின் கேலியைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் முரண்பாட்டில் சிக்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் உண்மையை அறிந்துகொள்வதற்கான உரைகல் எதுவும் இல்லை. அவர்கள் நேர்வழியில் செல்லாமல் பல்வேறு வழிகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நேரான வழியைக் காட்டியிருக்கிறான். எவ்விதத் தயக்கமும் தடுமாற்றமும் இன்றி அந்தப் பாதையில் செல்லுங்கள்.

நீங்கள் விரும்பாவிட்டாலும்

உலகியல்வாதிகள் அவ்வளவு எளிதாக தங்களின் செல்வங்களை மற்றவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்வங்களை சேகரித்துக் கொண்டே செல்வார்கள். இதுதான் சமூகத்தைவிட்டு அவர்களை துண்டிக்கிறது. அவர்கள் சமூகத்தை ஒரு குடும்பமாக எண்ண மாட்டார்கள். தங்களின் நலன்களைத் தவிர மற்றவர்களின் நலன்களை பொருட்படுத்த மாட்டார்கள். நம்பிக்கையாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.

மதுவும் சூதாட்டமும்

உயிரையும் பொருளையும் அர்ப்பணித்தல், செலவு செய்வது தொடர்பான இந்தப் பின்னணியில் மதுவும் சூதாட்டமும் குறித்த கேள்வி இடம்பெறுவது கவனிக்கத்தக்கது. மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “இன்று மதுவும் சூதாட்டமும் முழுக்க முழுக்க தீமையின் கூறுகளையே கொண்டிருப்பதுபோல அன்றைய அறபுக் கலாச்சாரத்தில் அவை முழுக்க முழுக்க தீமையின் கூறுகளை

உங்களுக்காக சேர்த்து வையுங்கள்

திருமணம் தொடர்பான பேச்சு தொடங்கிய பிறகு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்படுகிறது. அந்தப் பதிலின்மூலம் சமூகத்தில் அது தொடர்பாகப் பரவியிருந்த பிழையான நம்பிக்கைகள் நீக்கப்படுகின்றன. அடுத்தடுத்த வசனங்களில் இடம்பெறப் போகும் விவகாரத்து தொடர்பான விசயங்களுக்கும் அந்தப் பதில் அவசியமானதாக இருக்கிறது.    وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ

தலாக் தொடர்பான சட்டங்கள்

மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து விலகியிருப்பது தலாக்கின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அடுத்தடுத்த வசனங்கள் தலாக் தொடர்பான சட்டங்களைப் பேசுகின்றன.  وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ

தலாக்கும் அநியாயமும்

அடுத்து வரும் வசனங்கள் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மீது இழைக்கப்படும் இரண்டு வகையான அநீதியைக் குறித்துப் பேசுகின்றன. உண்மையில் அது ஆண்கள் தங்களுக்கு எதிராகவே செய்து கொள்ளும் அநீதி. அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள்.   وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ

எத்தனை வகையான உறவுகள்!

ஒவ்வொரு உறவும் நட்பும் அன்பின் அடிப்படையில் அமைய வேண்டியது அல்ல. சில உறவுகள் தேவையின் அடிப்படையிலானது. அங்கு பயன் பெற்று பயனளித்தல் அல்லது வெறுமனே பயனடைதல் இருக்கும். சிலர் வெறுமனே பயனடைதலை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அவர்களையும் மீறி ஏதோ ஒரு வகையில் பயனளித்தல் நிகழ்வதால் அந்த உறவு நீடிக்கிறது.

மனச்சிக்கல் கொண்டவர்களின் புகார்கள்

மனச்சிக்கல் கொண்டவர்களுடன் சேர்ந்திருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்கள் தங்களின் பலவீனங்களை கச்சிதமாக மற்றவர்களின் பலவீனங்களாக முன்வைப்பார்கள். அவர்களால்தான் தாங்கள் இப்படி ஆகிவிட்டோம் என்பார்கள். மற்றவர்களைக் குறித்த அவர்களின் புகார்கள் நீண்டு கொண்டே செல்லும். உலகம் கெட்டு விட்டது, சமூகம் கெட்டு விட்டது, தாங்கள் மட்டுமே நேர்வழியில இருக்கிறோம்

கண்ணிருந்தும் குருடன்

“நீ ஒரு விசயத்தை உண்மையிலேயே விரும்பினால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதை நோக்கி உன்னை நகர்த்திச் செல்லும்.” இது ரசவாதி என்ற நூலில் இடம்பெறும் வாசகம். இது இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் அமைத்த நியதிகளுள் ஒன்று. இந்தப் பிரபஞ்சம் நமக்கு எதுவும் தராது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும்

நான் சுயம்பு

“நான் சுயம்பு. எனக்கென எந்த மரபும் ஆசிரியரும் இல்லை” இந்த வாசகத்தை அவர் பெருமிதமாகச் சொன்னாரா அல்லது இயல்பாகச் சொன்னாரா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் இது பெருமிதம்கொள்ளத்தக்க ஒன்று அல்ல; உதிரிகளிடமிருந்து வெளிப்படும் இயல்பான ஒரு சொல்தான். ஒருவனுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்று

திருக்குர்ஆனின் ஓர் அற்புதம்

திருக்குர்ஆனை மேலோட்டமாகப் படித்துப் பார்க்கும்போது அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்களாகத் தெரியும். அதனை முறையாகவும் ஆழ்ந்தும் படிப்பவர்கள் அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல என்பதையும் அவை நுணுக்கமான இழைகளால் பின்னப்பட்டுள்ளவை என்பதையும் வசனங்களுக்கு இடையேயான நுணுக்கமான தொடர்புகள் அதன் மகத்தான அற்புதங்களில் ஒன்று என்பதையும்

பெரும் சான்றுகள்

அவர்கள் ஏன் தாங்கள் அறிந்துகொண்ட உண்மையை மறைக்கிறார்கள்? அல்லாஹ்வின் விசயத்தில் அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டம் சரியானதல்ல. அதுதான் அவர்களின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களும் தங்களுக்குப் பயனளிக்கவோ தீங்களிக்கவோ முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் அவனை விடுத்து தங்களின் குருமார்களையும் அறிஞர்களையும் தங்களின் எஜமானர்களாக ஆக்கிக்

கடக்க முடியாத கணமா அது?

“அந்த கணத்தை என்னால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வெறுமையும் அழுத்தமும் சலிப்பும் கடந்த உணர்வு அது. அந்த கணத்தில் செத்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?“ ஏதோ ஒரு வகையில் மன அழுத்தமோ மனச் சிக்கலோ கொண்டவர்களுக்கு அவ்வப்போது ஏற்படக்கூடிய நிலைதான் இது.

ஆன்மாக்களின் உலகம்

“நான் மனிதர்களைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்து விடுவேன்” உங்களின் இந்தக் கணிப்பை பொதுவான ஒன்றாக முன்வைக்க முடியாது. உங்களின் கணிப்பு உங்களுடன் ஒத்திசைந்து செல்பவர் யார், முரண்படுபவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு வேண்டுமானால் உங்களுக்குப் பயன்படலாம். பொதுவாக ஒருவரைப் பார்த்தவுடனேயே நமக்கு ஏற்படும் உணர்வு நமக்கும்

வேதத்தின் ஞானங்களை மறைப்பது

அடுத்து வரும் வசனம் ஸஃபா, மர்வா மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மெதுவாக ஓடுவதைக்(சயீ செய்வதை) குறித்துப் பேசுகிறது. வெளிப்படையாகப் பார்க்கும்போது இந்த வசனம் மையக் கருத்தை விட்டு விலகியதாக, ஓர் இடையீடாகத் தோன்றும். கொஞ்சம் கவனித்துப் பார்க்கும்போது மையக்கருத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இது

மறைமுக அழுத்தம்

நாம் விரும்பும் விசயத்தை சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக வெளிப்படுத்துவது ஒரு வகை. இது இலகுவானது, சிக்கல் அற்றது, புரிந்து கொள்ளத்தக்கது. இன்னொரு வகை, நாம் விரும்பும் விசயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு அதை அவர்கள் நமக்காகச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது. மனிதர்கள் சுயநலம் கொண்டவர்கள் என்பதால் பெரும்பாலும் அவர்கள்