குறும்பதிவுகள்

விதி தொடர்பான என்னுடைய ஓர் அனுபவம்

என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்போது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நான் தேடிச் சென்ற பல விசயங்களை என்னால் அடைய முடியாமல் போயிருக்கிறது. அதே சமயம் எந்த முயற்சியும் செய்யாமல் பல விசயங்கள் என்னைத் தேடி வந்திருக்கின்றன. எனக்கானதைத் தேடி நான் எங்கோ சென்று

இரகசியங்களின் சுரங்கம்

மனிதனின் ஆழ்மனம் செயல்படும் விதம் அற்புதமானது. அது அவனைக் குறித்தே அவனுக்கு எதுவும் தெரியாது என்பதைக் காட்டக்கூடியது. அவன் தன்னைத் தானே ஆழ்ந்து கவனிக்கும்போதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு புலப்படத் தொடங்குகிறது. ஆனாலும் அவன் இரகசியங்களின் சுரங்கம்தான். தோண்டத் தோண்ட அவன் புலப்பட்டுக் கொண்டே வருவான். அவனுடைய

பாவங்கள் என்னும் சிறைச்சாலை

பாவங்களிலிருந்து விடுபட நான் என்ன வேண்டும்? மனிதர்களிடம் இயல்பாகவே பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே ஷைத்தான் அவர்களை வழிகெடுக்க முயற்சிக்கிறான். பாவங்கள் செய்யாமல் வாழும் வாழ்க்கை இன்பங்கள் அற்ற துறவு வாழ்க்கை என்ற ஒரு மாயையை அவன் அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். அவர்கள் பாதுகாப்புக்

சலிப்பாக இருக்கிறது

வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது. அன்றாடம் செய்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு என்ன இருக்கிறது வாழ்வதற்கு? இந்த எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு உருவாகி இருக்காது என்று கருதுகிறேன். சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, விளையாடுவது, பொழுது போக்குவது, தூங்குவது என அத்தனை வேலைகளிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கும்

மனக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும்

நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம். மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின் ஆரம்ப கட்டம் மன அழுத்தத்திலிருந்து அல்லது

உயிரோட்டமான தொழுகை

நம்பிக்கையாளனுக்கு தொழுகை உடலின் இதயத்தைப் போல மிக அவசியமான ஒன்றாகும். இதயத்தில் ஏற்படும் பாதிப்பு எப்படி உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துமோ அப்படித்தான் தொழுகையில் ஏற்படும் குறைபாடும் அலட்சியமும் அவனுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழுகையை விடுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டு தூரமாகி  விடுவான். இதுதான் நம்பிக்கையாளர்களையும்