திருக்குர்ஆன் தெளிவுரை

அல்லாஹ்வே! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே!

யூதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இறுதித் தூதர் முஹம்மது நபியவர்கள் தங்கள் இனத்திலிருந்து வரவில்லை என்பதுதான். நுபுவ்வத் எனப்படும் தூதுத்துவம் தங்கள் இனத்தாருக்கு மட்டுமே உரியது என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைக் குறித்து ‘இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள்’ என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களை

அற்புதமான நிகழ்வுகள் -1

இங்கிருந்துதான் அத்தியாயத்தின் அசலான கருப்பொருள் தொடங்குகிறது. இம்ரானின் குடும்பத்தாருடைய வரலாறு உள்ளத்தை ஈர்க்கும் அற்புதமான வகையில் எடுத்துரைக்கப்படுகிறது. அந்த வரலாற்றினூடே ஈசா நபி குறித்தும் அவரது தாயார் மர்யம் குறித்தும் கிருஸ்தவர்கள் உருவாக்கி வைத்திருந்த பிழையான நம்பிக்கைகளுக்கும் அவர்கள் முன்வைத்த ஆட்சேபனைகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. இந்த உண்மையான வரலாறு தவ்ஹீதின்

அற்புதமான நிகழ்வுகள் – 2

மர்யமிடமும் வானவர்கள் வருகிறார்கள், ஸகரிய்யாவிடம் வந்ததைப்போல. அவருக்கும் ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறார்கள். ஸகரிய்யா ஆச்சரியமடைந்ததைப்போல மர்யமும் ஆச்சரியமடைகிறார். இரண்டுமே மனித அறிவின் சாத்தியத்தைக் கடந்தவை. அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு மட்டுமே புரிந்துகொள்ள முடியுமானவை. கிருஸ்தவர்கள் ஈசாவை இறைவனின் மகன் என்றும் மர்யமை தெய்வீகக் குழந்தையை பெற்றெடுத்த

ஈசா நபி தொடர்பான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஈசா நபி இவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்திய பிறகும் தம்முடைய தூதுத்துவ நோக்கங்களை தெள்ளத் தெளிவான மொழியில் முன்வைத்த பிறகும் இஸ்ரவேல் சமூகத்திலுள்ள அறிஞர்களும் தலைவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து நிராகரிப்பும் எதிர்ப்பும் சூழ்ச்சியும் வெளிப்படுவதை அவர் உணர்ந்தார். அவர்களை விட்டுவிட்டு அந்த சமூகத்திலுள்ள எளிய மனிதர்களை

வேதக்காரர்களுக்கான அழைப்பு

கிருஸ்தவர்களுக்கு எதிரான உறுதியான ஆதாரம் நிலைநிறுத்தப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் முபாஹலாவின் பக்கம் அழைக்கப்பட்டு அவர்களுடனான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு யூதர்கள், கிருஸ்தவர்கள் இரு சாராரும் வேதக்காரர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்பட்டு உரையாடப்படுகிறார்கள். அவர்கள் வேதத்தை கற்பதாலும் கற்பிப்பதாலும் அதன் போதனைகளில் இன்னும் மீதமிருக்கின்ற தவ்ஹீதின்

கோணலான மனமும் பிழையான கண்ணோட்டமும்

அடுத்து வேதக்காரர்களின் இன்னொரு வழிகேடும் அதற்குப் பின்னால் இருக்கும் பிழையான கண்ணோட்டமும் எடுத்துரைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் அவர்களிலும் தங்கள் வேதத்தின்படி நியாயமாக நடந்து கொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்களில் தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்களில் ஒரு தரப்பினர்தான் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.  وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ

உங்களுக்காக சேர்த்து வையுங்கள்

திருமணம் தொடர்பான பேச்சு தொடங்கிய பிறகு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்படுகிறது. அந்தப் பதிலின்மூலம் சமூகத்தில் அது தொடர்பாகப் பரவியிருந்த பிழையான நம்பிக்கைகள் நீக்கப்படுகின்றன. அடுத்தடுத்த வசனங்களில் இடம்பெறப் போகும் விவகாரத்து தொடர்பான விசயங்களுக்கும் அந்தப் பதில் அவசியமானதாக இருக்கிறது.    وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ

மனச்சிக்கலுக்கான ஓர் எளிய தீர்வு

மனதில் நேர்மறையானவை, எதிர்மறையானவை என ஆயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. வருகின்ற எண்ணங்களை புறக்கணிப்பதும் அவற்றை நீடிக்கச் செய்வதும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எதிர்மறையான எண்ணங்களை புறக்கணிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை நீடிக்கச் செய்ய வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியது.

மதுவும் சூதாட்டமும்

உயிரையும் பொருளையும் அர்ப்பணித்தல், செலவு செய்வது தொடர்பான இந்தப் பின்னணியில் மதுவும் சூதாட்டமும் குறித்த கேள்வி இடம்பெறுவது கவனிக்கத்தக்கது. மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “இன்று மதுவும் சூதாட்டமும் முழுக்க முழுக்க தீமையின் கூறுகளையே கொண்டிருப்பதுபோல அன்றைய அறபுக் கலாச்சாரத்தில் அவை முழுக்க முழுக்க தீமையின் கூறுகளை

நீங்கள் விரும்பாவிட்டாலும்

உலகியல்வாதிகள் அவ்வளவு எளிதாக தங்களின் செல்வங்களை மற்றவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்வங்களை சேகரித்துக் கொண்டே செல்வார்கள். இதுதான் சமூகத்தைவிட்டு அவர்களை துண்டிக்கிறது. அவர்கள் சமூகத்தை ஒரு குடும்பமாக எண்ண மாட்டார்கள். தங்களின் நலன்களைத் தவிர மற்றவர்களின் நலன்களை பொருட்படுத்த மாட்டார்கள். நம்பிக்கையாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.

தூதுத்துவ வரலாறு

நிராகரிப்பாளர்களின், நயவஞ்சர்களின் கேலியைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் முரண்பாட்டில் சிக்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் உண்மையை அறிந்துகொள்வதற்கான உரைகல் எதுவும் இல்லை. அவர்கள் நேர்வழியில் செல்லாமல் பல்வேறு வழிகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நேரான வழியைக் காட்டியிருக்கிறான். எவ்விதத் தயக்கமும் தடுமாற்றமும் இன்றி அந்தப் பாதையில் செல்லுங்கள்.

இஸ்லாம் என்னும் மகத்தான அருட்கொடை

அடுத்து வரும் வசனங்கள் நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமான பொதுவான அழைப்பைக் கொண்டிருந்தாலும் நயவஞ்சகர்கள், நம்பிக்கையில் பலவீனமானவர்களுக்கான தனித்துவமான அழைப்பையும் உள்ளடக்கி இருக்கின்றன. தெளிவான சான்றுகளோடு முன்வைக்கப்படும் இந்த அழைப்பைப் புறக்கணிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் அவை எச்சரிக்கின்றன. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا

சுதந்திரமானவர்களா? அல்லது அடிமைகளா?

அதிகப்படியான சுதந்திரம், பெரும் செல்வம், அதிகாரம் ஆகியவை நேர்மறையான விளைவுகளைவிட எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது இலகுவானது. ஆனால் கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான சூழல் நம்மை தவறான திசைகளின் பக்கம் தள்ளுகிறது. மனிதர்கள் உள்ளுக்குள் கட்டுப்பாடுகளை விரும்புவது இதனால்தான்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்ந்தது? மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?’ ‘நான் இப்படி செய்திருக்கக்கூடாது’ ‘என்னைவிட திறமைக்குறைவானவன் எல்லாம் முன்னேறிக் கொண்டே செல்கிறானே!’ ‘நானெல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆள்’ இதுபோன்ற புலம்பல் வார்த்தைகளால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மீண்டும் மீண்டும் அந்த கசப்புணர்வில் மூழ்கிக் கொண்டே

இரு வகை மனிதர்கள்

இஸ்லாம் சொல்லும் வழிபாடுகளின் நோக்கம் தக்வாதான். வழிபாடுகள் மனிதனின் உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அவனுடைய தீய இச்சைகளின் பிடியிலிருந்து அவனை விடுவிக்க வேண்டும். ஆனால் உலகியல்வாதிகளின் வழிபாடுகள் வெறும் சடங்குகளாகத்தான் இருக்கும். அவை அவர்களின் உள்ளங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் தீய இச்சைகளுக்கு அடிமையானவர்கள். அவற்றை நிறைவேற்றுவதையே

ஹஜ் தொடர்பான சட்டங்கள்

நோன்பு, புனித மாதங்கள், போர், புனித மாதங்களில் போர், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல் ஆகிய விவகாரங்களுக்குப் பிறகு இப்போது ஹஜ் தொடர்பான விவகாரம் இடம்பெறுகிறது. ஏற்கனவே புனித மாதங்கள் தொடர்பான விவகாரத்தில் ஹஜ்ஜைக் குறித்த குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த வசனங்கள் முந்தைய வசனங்களோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன.